விமானம் பறந்து கொண்டிருந்த போது பைலட் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதிக்கு செல்ல முயன்ற பயணி கைது செய்யப்பட்டார்.
இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.ஐ.138 விமானம் ஒன்று புதுடெல்லிக்கு நேற்று இரவு கிளம்பியது.
இந்நிலையில் விமானம் வானில் பறந்து கொண்டிருக்கையில் பயணி ஒருவர், திடீரென விமானத்தின் பைலட் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதிக்கு செல்ல முயற்சித்தார்.
இதைத்தொடர்ந்து, விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, விமானத்தில் விதிகளை மீறி பைலட் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதிக்கு செல்ல முயன்ற விமானப்பயணி கைது செய்யப்பட்டார். இதனால், விமானம் மீண்டும் மிலனுக்கு சென்றது. மிலனுக்கு வந்தவுடன் அவர் இத்தாலி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் விமானமானது திருப்பி மிலனுக்கு சென்றது. அவர் பெயர் குர்ப்ரீத்சிங் என தெரிய வந்தது. இச்சம்பவத்தால் ஏ.ஐ.138 விமானம் டெல்லி வர சுமார் 3 மணி நேரம் தாமதமானது.