மகா சங்கத்தினருக்கான ஒழுக்கக் கோவையை தயாரிக்கும் விடயத்தில் பாரிய பிரச்சினைகள் உள்ளதாகவும் இந்த விடயத்தில் தான் தலையிட்டால், அதற்கு வேறு விளக்கம் கொடுக்க ஒவ்வொருவரும் முற்படுவார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
மகா நாயக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ள விடயங்களில் சிறிய தேரர்களுக்கு உடன்பாடில்லாத நிலைமை காணப்படுகின்றது. இதனை மகாநாயக்கர்களும் தேரர்களும் பேசித் தீர்த்துக் கொண்டால் மாத்திரமே இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் தேரர்களுக்கு நடக்கும் சம்பவங்களை அனுமதிக்க முடியாதுள்ளது. விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்றப்பட்ட பின்னர், பயணப் பொதிகளை வெளியில் எறிந்து விமானத்தை நிறுத்தி தேரர் வெளியேற்றப்படுகின்றார். உடுவே தம்மாலோக தேரருக்கு இவ்வாறு நடைபெற்றது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. நினைவு கூர்ந்தார்.