வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரினால் மருந்தகங்கள், தனியார் வைத்தியசாலைகள், ஆயுர்வேத வைத்திய நிலையங்களுக்கு நேற்று காலை திடீரென்று நேரடியாக விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி செயற்பட்ட மருந்தகங்கள், கதிர்வீச்சு தரமான முறையில் பயன்படுத்தப்படாமலிருந்த தனியார் வைத்தியசாலைகள், ஆங்கில மருந்துகள் வழங்கிய ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் இச்சுற்றிவளைப்பில் அமைச்சரினால் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர். ஜி. குணசீலன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்திய ஆயுர்வேத வைத்திய நிலையத்திலிருந்து ஆங்கில மருந்துகள் சிலவற்றை மீட்டுள்ளதாகவும் ஆயுர் வேத வைத்திய நிலையத்தில் சட்டத்திற்குப்புறம்பாக ஆங்கில மருந்துகளை வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த ஆயுள்வேத வைத்திய நிலையத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.