இதுவரை எமது பல்லைக்கழகங்களில் புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டு உயர் கல்விக்காக 486 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடு சென்று மீளத் திரும்பாதுள்ளதாகவும், இவர்களிடமிருந்து 813 மில்லின் ரூபாவை அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பட்டப் பின்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேரினது விபரங்களைப் பகிரங்கமாக வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நடைமுறையிலுள்ள சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கமைய அவர்களுக்காக அரசாங்கம் செலவிட்டுள்ள பொது நிதியை மீண்டும் அறவிட்டுக் கொள்வதற்கு முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.