டிலான் பெரேரா எம்.பி. நிமல் சிறிபால டி சில்வா அல்ல யாருடனும் அரசியல் பயணத்தை மேற்கொள்ளலாம் எனவும், தமது பயணம் மஹிந்த ராஜபக்ஷவுடன் மட்டும் தான் எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு 16 பேர் கொண்ட குழுவிலுள்ள முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா உரையாற்றுகையில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இன்று இரவு நடைபெறுகின்ற கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ இல்லத்துக்கு வருகை தந்திருந்த ஜோன்ஸ்டன் எம்.பி.யிடம் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனைக் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வரக் கூடாது எனும் கருத்தை 16 பேர் கொண்ட குழுவிலுள்ள டிலான் பெரேரா தொடர்ந்தும் கூறிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.