இன்றைய கால கட்டத்தில் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது மக்கள் தமது உயிரை பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு நிலை உருவாகியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மை காலத்தில் அதிக அளவில் பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றதாகவும், அமைச்சின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தனியார் பேருந்துகளை விட, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெற்ற விபத்துக்கள் குறைவு எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 22 ஆயிரம் தனியார் பேருந்துகளும் 5400 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் தற்போது நாட்டில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்காலத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பதுளையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் நேற்று (30) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.