நாட்டில் வரட்சியினால் 7404 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 361 பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் வரட்சியினால் 15 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், வட மத்திய மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியினால் 7389 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்பிரகாரம், பாதிக்கப்பட்ட மக்கள் நான்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
110 குடும்பங்களைச் சேர்ந்த 341 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.