500 நாள்களை தாண்டி வீதியில் தவம் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற பிரதி அமைச்சர்களிடம் கேப்பாப்பிலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் 518 ஆவது நாளாக இன்றும் இராணுவ முகாமிற்கு முன்னால் கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாம் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதனை கருத்தில் கொண்டு மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள எமது வன்னி தேர்தல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எம்மை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.