கிங்தொட்ட அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட 126 பேருக்கு நஷ்டஈடு

239 0

காலி, கிங்தொட்டயில் இடம்பெற்ற இனவாத அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட 126 பேருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நஷ்டஈடு வழங்கி வைக்கப்பட்டன.

38 லட்சம் ரூபா பெறுமதியான நஷ்டஈடு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிங்தொட்ட சாஹிரா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அதிபருக்கான இரு மாடி விடுதி மற்றும் ஆசிரியர்களுக்கான விடுதி என்பனவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று (30) நடைபெற்றது. இந்தக் கட்டிடத்துக்காக 820 லட்சம் ரூபாவை அரசாங்கம் செலவு செய்துள்ளது.

இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு நஷ்டஈடு வழங்கும் நிகழ்விலும் பிரதமர் கலந்துகொண்டுள்ளார்

Leave a comment