மன்னார் மருத்துவ முகாமில் முன்னாள் போராளிகள் கலந்து கொள்ளவில்லை

459 0

former-ltte

மன்னார் பொது வைத்தியசாலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆயினும், முன்னாள் போராளிகள் எவரும் மருத்துவ பரிசோதனைக்காக இன்றைய தினம் சமூகமளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
விச ஊசி விவகாரம் தொடர்பில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மன்னார் வைத்தியசாலையில் நான்கு முன்னாள் போராளிகளும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் 25 முன்னாள் போராளிகளும் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.