வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாமில் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெறும் ஆயுதப் பயிற்சியினால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களால் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, கடிதம் அனுப்பிவைத்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
செட்டிகுளம் மெனிக்பாமில் உள்ளிட்ட பழைய நெற்களஞ்சியசாலையில் கடந்த இண்டு நாட்களாக தங்கியிருக்கும் 25 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் குறித்த பகுதியில் தாம் 5 நாட்கள் பயிற்சியில் ஈடுபடப்போவதாக பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இராணுவ முகாமில் இடம்பெறும் ஆயுதப் பயிற்சியினால் ஏற்பட்ட அதிர்வுகள், மற்றும் காதுகளைத் துளைக்கும் சத்ததினால் சிறுவர்கள் முதல் முதியவர்கள்வரை அச்சமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற ஆயுதப் பயிற்சியினால் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இருதய நோயாளியான வயோதிபர் ஒருவர் சுகயீனம் அடைந்து 4ஆம் கட்டை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
செட்டிகுளம் மெனிக்பாமில் கடந்த ஆட்சிக்காலத்தில் சிறிய முகாம் ஒன்றை அமைத்திருந்த இராணுவத்தினர் யுத்ததின் பின்னர் அரச மற்றும் தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரத்து 347 ஏக்கர் காணியில் உல்லாச விடுதி மற்றும் பெரிய அளவிலாள தோட்டங்களை அமைத்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் கடந்தாலும், யுத்ததின் தாக்கத்தில் இருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இன்றுவரை மீளமுடியாது தவிக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் யுத்தகாலத்தை நினைவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது.
இவ்வாறான பின்னணியில் தமிழர்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ ஆயுதப் பயிற்சி நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஒரு பகுதி மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துக்கொண்டு, நல்லாட்சி நடத்துவது என்பது இயலாத காரியமாகும் எனவும், கடந்த அரசாங்கங்கள் விட்ட அதே தவறுகளை, இந்த நல்லாட்சி அரசாங்கமும் மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார் – சன்னார் பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தொடரும் கனரக ஆயுதப் பயிற்சிகள் காரணமாக அந்தப் பிரதேசத்தில் வாழும் கர்ப்பிணித் தாய்மார்களின் கருக்கள் சிதையும் அபாயம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அண்மையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- வவுனியா இராணுவ முகாமில் ஆயுதப்பயிற்சி-மக்கள் பீதியில்
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள்
September 26, 2024 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த மதிப்பளித்து நிகழ்வு
November 22, 2024 -
பிரான்சின் ஏனைய வெளி மாநிலங்களிலும் இடம்பெறவுள்ள மாவீரர் நாள்- 2024
November 18, 2024 -
மேதகு தேசியத் தலைவரின் அகவை விழா – யேர்மனி
November 2, 2024 -
பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2024
October 20, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 நெதர்லாந்து.
October 17, 2024 -
மாவீரர் நாள் – 2024 -பிரான்சு.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 – சுவிஸ்.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பெல்சியம்
October 7, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பிரித்தானியா
October 5, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 யேர்மனி, Dortmund.
September 29, 2024