எதிர் கட்சித் தலைவர் பதவியை பறிப்பது எமது நோக்கமல்ல – டிலான்

329 0

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படும் எதிர்க் கட்சி தலைவர் பதவியை பறிப்பது எமது நோக்கமல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான்  பெரேரா. 70 இற்கும் அதிகமான  உறுப்பினர்களை கொண்டு பாராளுமன்றத்தில் எதிர் தரப்பினராக செயற்படும் பொது எதிரணியினர் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர் கட்சி தலைவர் பதவியை பொது எதிரணியின்  ஒரு சில உறுப்பினர்கள் மாத்திரமே கோரி வருகின்றனர். ஆனால் கட்சியின் முக்கியஸ்தர்களது நோக்கம் இதுவல்ல.   ஆனால்  பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு இணங்க  கூட்டு எதிரணியினரே எதிர்கட்சியாக செயற்பட வேண்டும்  16 உறுப்பினர்களை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேசிய அரசாங்கம்  எதிர் கட்சி பதவியை வழங்கியமை விசித்திரமாக  நிகழ்வாகவே காணப்பட்டது.

பாராளுமன்றத்தில் 70 இற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ள  பொது எதிரணியினருக்கும், 06 உறுப்பினர்களை கொண்டுள்ள  மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் தங்களது கருத்துக்களை குறிப்பிட குறுகிய  கால நேரம் வழங்கப்பட்டுள்ளமையானது பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது.

ஆகவே பாராளுமன்றத்தில் பொது எதிரணியினர் சுயாதீனமாக செயற்பட வேண்டும் அப்போதே பல விடயங்கள் விவாதிக்கப்படும்  என்றார்.

Leave a comment