மத்திய மாகாணம் கொத்மலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலத்தில் ஆர்பாட்ட ஊர்வலமும் கடையடைப்பும் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த கல்வி பொது உயர்தரத்தில் வெளி மாவட்ட மாணவர்களை பரீட்சைக்கு அனுமதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு காரணமாக இருந்த அதிபரையும் பிரதி அதிபரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்யமாறும் மலையக மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வரபிரசாதங்களை தட்டி பறிக்க வேண்டாம் எனவும் தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் பெரும் திரலான பெற்றோர்களும் கடை உரிமையாளரகளும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டார்கள்.இதன் போது நகரத்தில் வாகன நெரிசலும் அமைதி இன்மையும் ஏற்பட்டது.இதன் போது பூண்டுலோயா பொலிஸார் தலையிட்டு நிலமையை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்தனர்.
குறிப்பாக அண்மைய க.பொ.உயர்தர தேர்வின் போது நுவரெலியா மாவட்ட பல்கலைகழகத்தின் வெட்டு புள்ளியை பெறும் நோக்கில் நூற்றுக்கணக்கான வெளி மாவட்ட மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றியுள்ளனர்.
இதனால் அதிபர் ஒருவரின் சேவை இடை நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது.இதற்கு சில பாடசாலைகளின் அதிபர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க இலங்கை பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் புஸ்பகுமார அவர்கள் குழு ஒன்றை நியமித்து விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.