வவுனியா இரண இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளையும் 7ஆடுகளையும் இன்று கிடாச்சூரியில் கைப்பற்றியுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று விஷேட அதிரடிப்படையினரால் இரணஇலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளை வாகனத்துடன் சாரதி, உதவியாளர் இருவருடன் கைது செய்துள்ளனர்.
அத்தோடு கைது செய்யபட்டவர்களுடன் வாகனம், 20 மாடுகளும் ஈச்சங்குளம் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட 20 மாடுகளையும் வாகனம், சாரதி உதவியாளர் ஆகியோரை நாளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 7 ஆடுகளையும் சந்தேக நபர் ஒருவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரணைஇலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளபோதே ஈச்சங்குளம் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.தற்போது ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.