மொரகஹகந்த திட்டத்தின் ஊடாக நாட்டின் நல்லிணக்கம் புலப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அதனை சரியாக முடித்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை தொடர்பிலும் அவர் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை தொடர்பில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.