முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை, இன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் நியமிக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளருமான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பில் நேற்றைய தினமும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான விசாரனைப் பிரிவு மூன்று மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.