யாழ்ப்பாணம் – கண்டி, A9 பிரதான வீதியில் பூனேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வரை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பூனேவ கடற்படை முகாமுக்கு அருகில் பாதையைவிட்டு அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மற்றும் மதவாச்சிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் வண்டியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மதவாச்சிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.