தீயினால் சேதமடைந்து பின்னர் முழுவதும் இடிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டுமான பணிக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை தி நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்தாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த சேதமடைந்தது. பின்னர், கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது. தற்போது, அங்கு புதிய கட்டிடத்தை கட்டும் பணி நடந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், “எதன் அடிப்படையில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது?” என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
கட்டட அனுமதி வழங்கிய பின்னர் 20 நாளில் 40% கட்டடம் கட்டப்பட்டது ஆச்சரியமளிக்கிறது என கூறிய நீதிபதிகள், கட்டுமான பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.