வங்காளதேசத்தில் தீர்ப்பை முன்கூட்டியே வெளியிட்ட வக்கீலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.வங்காளதேச சுதந்திர போராட்டத்தின் போது 1971-ம் ஆண்டு நடந்த போர்க்குற்றவாளி ஆன பி.என்.பி கட்சி தலைவர் சலாலுதீன் குவாடர் சவுத்ரி தூக்கிலிடப்பட்டார்.
அதற்கான தீர்ப்பு கடந்த 2013-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை கோர்ட்டு வெளியிடும் முன்பே அவரது வக்கீல் பக்ருல் இஸ்லாம் தாகா என்பவர் கோர்ட்டு வளாகத்தில் வெளியிட்டார்.
இன்டர்னெட்டில் இருந்து நீதிபதியின் தீர்ப்பின் பிரதி கிடைத்ததாக கூறினார். அதை தொடர்ந்து தூக்கிலிடப்பட்ட சவுத்ரியின் மனைவி பார்சுத்கத்தார் சவுத்ரி, மகள் ஹீமாம் கத்தார் சவுத்ரி உள்ளிட்டோர் இந்த தீர்ப்பு நகலை காட்டி சட்ட அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்ததாக குற்றம் சாட்டினர்.
அதை தொடர்ந்து வக்கீல் பர்குல் இஸ்லாம் தாகா உள்ளிட்ட 10 பேர் மீது வங்காளதேச சைபர் தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஷம்சுல் ஆலம் தீர்ப்பை முன்கூட்டியே வெளியிட்ட வக்கீல் பக்ருலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது தீர்ப்பளித்தார். மேலும் ரூ.1 கோடி அபராதம் விதித்தார். இவர் தவிர மேலும் 4 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கினார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவுத்ரியின் மனைவி பர்சுத் கத்தார் சவுத்ரி, மகன் ஹீமாம் கத்தார் சவுத்ரி ஆகியோரை விடுதலை செய்தார்.