5 வருடங்களுக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு கள்ளர்கள் மூலம் ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள பொருளாதார வல்லுனர்களால் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை அரச வைத்தியர்கள் எடுக்க முயற்சிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
இதனால் தங்களுக்கு உரிய கடமைகளை மட்டும் முன்னெடுக்குமாறும் வைத்தியர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பூனைக்குட்டிகளை போல் இருந்தவர்கள், இன்று 5 வருடங்களுக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.