இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் வழங்குவதாகச் சீனா தெரிவிப்பு

243 0

இலங்கை இராணுவத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை வழங்கவுள்ளதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, இலங்கையின் முப்படைகளுக்கும் பல்வேறு பயிற்சிகளை இந்த ஆண்டும் சீன தொடர்ச்சியாக வழங்கவுள்ளதாகவும் கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் சிரேஷ்ட கேணல் ஸி ஜியான்வெய் தெரிவித்துள்ளதாக ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன மக்கள் இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இரு நாடுகளினதும் சிறப்பான தொடர்பாடல், தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பயிற்சி கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் கடந்த சில ஆண்டுகளில் சிறந்த ஒத்துழைப்பைக் கண்டதாகவும் கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் சிரேஷ்ட கேணல் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment