அரச துறையில் 4 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்களுக்கு அழைக்கப்பட்டு கூடிய பெறுபேறுகளைப் பெறும் பட்டதாரிகள் 4 ஆயிரம் பேர் இதன்படி அரச தொழில் துறைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அரச அபிவிருத்தி அதிகாரிகளாக இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.