இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது-விமல்

245 0

காலியில் உள்ள இராணுவ முகாம்களை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா, மத்தள விமான நிலையத்தை பணம் கொடுத்து எடுக்க இருப்பது வணிக நோக்கத்திற்காக இல்லை எனவும் தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் விமான நிலையத்தை கொண்டு வருவதற்காகவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 29 விமான நிலையங்கள் இருப்பதுடன் அதில் 18 விமான நிலையங்கள், மத்தள விமான நிலையம் அமைந்துள்ள வான் எல்லையிலேயே அமைந்துள்ளது.

இதனால் இந்தியாவிற்கு எவ்வித வணிக நன்மைகளும் இல்லை எனவும் தற்காலிகமாக விமான நிலையத்தின் 70 வீதத்தை பெற்றுக்கொள்வதற்கே செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment