அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத்தளபதி ஜெனரல் ரொபேட் பிறவுண் தலைமையிலான குழுவினர் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்தனர்.
கடற்படைத்தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது கடல்சார் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பினை நினைவுகூரும்வகையில் இருவரும் நினைவுச்சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர்.