கடந்த 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பன்னாட்டுப் பெண்கள் மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு
யாழ்ப்பாணத்தில் முதற்றடவையாக பன்னாட்டு பெண்கள் ஆராய்ச்சி மாநாடு இந்த வருடம் இடம்பெற்றமை உலகப் பெண்களுக்கே மிகப் பெரிய பேறாக குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயமாக அமைந்ததெனலாம்.
யாழ்மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ரி .தேவானந்த் தலைமையில் இந்த மாநாடு,சிறப்புற இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
காலத்தின் தேவை அறிந்து , இடத்தையும் , கருப்பொருளையும், தெரிவு செய்தமை ஏற்பாட்டாளர்களின் பெண்கள் மற்றும் பெண்ணியம் தொடர்பான பெரும் கரிசனையை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இரண்டு நாள்கள் முழுநாள் கருத்தமர்வாக இடம்பெற்ற இந்த மாநாட்டில் 83 ஆய்வாளர்களின் பங்களிப்பில் 52 ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளைச் சமர்ப்பித்திருந்தனர்.
நிகழ்வுக்கான வரவேற்பையும் ,வரவேற்புரையையும், மாலைநேர தலைமை தாங்கலையும் நிகழ்வின் முக்கிய பங்காற்றிய இலங்கை மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன் வழங்கியிருந்தார் .
பயனளிக்கத்தக்க சமூக நிலைப்பாடு தொடர்பான ஆய்வுரைகள் முன்வைக்கப்பட்டன .
இந்த மாநாட்டில் உரையாற்றிய அறிஞர்களும், ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்த ஆய்வாளர்களும் ஒட்டுமொத்த உலகப்பெண்கள் பற்றிப் பேசாதமை வருத்தத்துக்கு உரிய ஒன்றுதான்.
ஆனாலும் அவரவர் தமது சமூக நிலைப்பாடு சார்ந்து மிகத் துல்லியமான ஆய்வுகளையும், பூரண விளக்கங்களையும் முன்வைத்திருந்தார்கள்.
வரலாற்றில்முதற்றடவையாக- யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பன்னாட்டுப் பெண்கள் மாநாட்டில் இடம்பெற்ற ஆய்வுகளும், கருத்துரைகளும், கருத்தரங்கில் பங்குபற்றிய பெண்ணிய செயற்பாட்டாளர்களையும் ,ஆர்வலர்களையும் தெளிவடையவும் அடுத்த படிநிலைக்கு இட்டுச்செல்லவும் வழிகோலி உள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு வகையில் அவள் சார்ந்த சமூகத்தால் பாதிப்பை எதிர் கொள்கின்றாள் என்பது மிக துல்லியமான உண்மை.
அந்த துன்பங்கள்தான் எவை ?அவை எப்படியாக பெண்களைத் தாக்குகின்றன என்பது தொடர்பில் எல்லாப் பெண்களுக்கும் விளங்கவைக்க வேண்டிய தேவை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கின்றது .
யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் முன்வைத்த பயனுள்ள கருத்துக்கள்
அதை உணர்ந்தவராக முதல் நாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்மாவட் டத்தின் மேலதிக மாவட்டச் செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் பெண்கள் தொடர்பான முக்கிய விடயங்களை முன்வைத்தார் இவை யாழ்.மாவட்ட பெண்கள்தொடர்பாக என்றில்லாமல் ஒட்டுமொத்த பெண் இனத்தவர்களுக்கும் வேண்டப்பட்ட கருத்துக்களமாகவே அமைந்திருந்தது.
யாழ்மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாககுறிப்பிட்ட அவர், மாற்றுவலுவுடைய, கணவன்மார்களை கொண்ட குடும்பங்கள், காணாமல் போன கணவன்மார்களைக்கொண்ட குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள், என ஒவ்வொரு வழியிலும் வாழ்க்கையில் தலைமை தாங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ள வெவ்வேறு தரப்பினரை பட்டியலிட்டார் .
நிலைத்து நிற்கும் அபிவிருத்திக் குறியீட்டில் பெண்களது பங்கு 2030 ஆம் ஆண்டளவில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்கான வகிபங்கு கடடாயம் பூரணப்ப டுத்தப்படவேண்டும் ,போரால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்ட முடியவில்லை .
கிராமியப்பெண்கள் சரியான முறையில் வலுவூட்டிடப்படவில்லை. 2030ஆம் ஆண்டிலாவது எமது நாட்டுப்பெண்கள் வலுவடைய வேண்டும் ,கட்டுக்கோப்பான சமூகத்தை பெண்களே உருவாக்குகின்றனர் ,1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் போர் குறித்த காரணங்களால் சமூகப் பெண்களின் பார்வையில் பெரும் இடைவெளி தோன்றியுள்ளது.
75 வீதமான பலதார திருமணங்கள் தற்போது அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் என்ன? இன்றைய இளையோரின் நிலை சமுதாய மாற்றம் , மகிழ்ச்சியான குடும்பத்தை ஏற்படுத்த என்ன செய்யவேண்டும்? தற்போது தலைவிரித்தாடும் நுண்கடன் திட்டத்தில் பெரிய இடர்களை எதிர்நோக்கும் பெண்கள், சிறந்த தலைமைத்துவம் இன்மையால் அந்த சவாலை எதிர்கொள்ள முடியாதுள்ளனர் ,சிறந்த தலைமைத்துவம் உள்ள பெண்களால் இதை முறியடிக்க முடியும் என்றும், மேலதிக மாவட்டச் செயலர் தெரிவித்தார் , இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தாலும், அதில் முழுமையாக வெற்றியடைய முடியவில்லை.
அதற்குப் பெண்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்புக் கிடைக்காமை பற்றி அவர் வருத்தம் தெரிவித்தார் ,தற்போது இளையோர் தடுமாறுவதற்கான காரணம், சமூகத்தில் பெண்கள் தமக்கான வகிபாவத்தை சரியாக பயன்படுத்தாமையே என அவர் தமது உரையில் குறிப்பிட்டார் .
இந்தியாவில் இருந்து வருகைதந்த ஆய்வாளர்கள் மற்றும் ,சிறப்பு விருந்தினர்களில் எதிராஜ் பல்கலைக்கழக விரிவுரையாளர் அரங்கமல்லிகா தனது சிறப்பு உரையில், உலக நாடுகளில் நடந்திருக்கும் போரும், போருக்கு பின்னரான அரசியலும் சொல்வது பெண்கள் எல்லா நேரங்களிலும் கண்காணிக்கப்படுகின்றனர் என்பதைத்தான்.
அதிகாரம் என்பது ஆதிக்கம் சார்ந்தது எனவும், அதிகாரம் என்பது எதிர்வினையாற்றக்கூடிய தாகவும் இருக்க வேண்டும், இது பெண்கள் விடயத்தில் முக்கிய வகிபாவத்தை பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
உலக அரங்கில் பெண் குழந்தைகள் கடத்தப்படுவதும், காணாமற் போவதும் ஏன் என்ற கேள்வி எழுகின்றது பெண்கள் பற்றி ஏராளம் பேசினாலும், பெண்கள் ஒடுக்கப்படுவதும், கடத்தப்படுவதும் , துர்நடத்தைக்கு உட்படுத்தப்படுவதும் இன்றுவரை நிறுத்தப்பட வில்லை.
பொருளாதாரத்தை பெண்கள் கையில் எடுக்க வங்கிக்கடன்கள் அவர்களுக்கு உதவுகிறது .அவர்கள் அதனைப் பயன்படுத்த வேண்டும் .
பெண்கள் தத்தம் உடல்சார்ந்த விடயங்களில் கரிசனை கொள்ள வேண்டும். உடல்சார்ந்து பார்க்கும்போது பெண்கள் தம் உடல் ஆரோக்கியத்தைப் பேணத் தயாராக இல்லை, கருவைச் சுமக்கும் பெண்கள் கூட, தத்தமது உடல் ஆரோக்கியத்தை பேணுவதில்லை.
பொதுவில் நாளாந்த வாழ்க்கையில் பெண்களில் 65 வீதமானோர் அதிகம் பசியோடு வாழ்வதாக உலகவங்கி நடத்திய ஆய்வு கூறுகின்றது, என்றார்
இலங்கையில் பெண்கள் போர்க்காலத்தில் போரிட்டார்கள் படைப்பிரிவுகளின் தலைவிகளாகவும் இருந்தார்கள் அதனால், கலாசார மாற்றம், சமூகமாற்றம் என்பவை நிகழ்ந்துள்ளன. இருந்தாலும் பெண்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளார்களா?, என்றால் ‘‘இல்லை’’ என்றே சொல்லவேண்டும் .
1992 ஆம் ஆண்டே கிராமப்புறப் பெண்கள் வாழ்வியலில் குடும்பங்க ளுக்குத் தலைமை தாங்கலாம் என்பதற்கு இந்தியா அனுமதி வழங்கி இருக்கின்றது .
இப்போதும் காப்பாற்றப்படவேண்டியவர்களாக பெண்கள் இருக்கின்றார்கள். தாய்மை நிறைந்த பெண்கள் கடடாயம் காப்பாற்றப்படவேண்டியவர்கள் .
இந்தியாவைப்பொறுத்த வரையில் தலித் பெண்கள் வாழ்க்கையில் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை உலகம் தெரிந்துகொள்ளல் அவசியம்.
போருக்குப்பின் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பெண்களே இலக்கியம் சார்ந்த பெண் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர் . பெண்கள் தத்தமது மொழிமூலமாக மாற்றத்தை முன்வைத்துள்ளனர், எனவும் அவர் கூறினார் .
மாநாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளும், உரைகளும் சிறப்பான பெண்ணியத்தைக் கட்டியெழுப்ப முனைந்த பேரறிவாளர்களின் ஆக்கபூர்வ சிந்தனைகளாகவே அமைந்திருந்தன.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்கினேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், பெண்கள் கல்வியிலும் , சமூக வாழ்வியலில், பொருளாதாரத்தி லும் முழுமை பெறவேண்டியுள்ளது -.பெண்கள் அரசியல், சமூக ,பொருளாதாரத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும், பெண்கள் குடும்பத்தில் வகிக்கும் தலைமைத்துவம், நாடளாவிய ரீதியில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
பெண்கள் செய்யும் வேலைகள் நாட்டை வளப்ப டுத்தும் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார் . யாழ். மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் நிகழ்வில் உரையாற்றும்போது முக்கிய புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டார் 80வீதமான பெண்கள் தமது பயணங்களின்போது துன்புறுத்தப்படுகின்றனர் என்ற செய்தியே அது.
இதனைப் பெண்களே முறி யடிக்க வேண்டும். பெண்கள் தமது பாதுகாப்பிலும் , பயணங்களிலும் தம்மை, தமது வகிபாவத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை இது சுட்டிக்காட்டு கின்றது .
‘‘இலங்கையில் ஒழுக்கமான பாதுகாப்பான பணியிட சூழல் உருவாக்கப்படவேண்டும் எனவும் ,மதுபான சாலைகளை மூடுவதற்கு எவரும் ஆர்ப்பாட் டம் செய்யவில்லை என்பதையும் மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார் ,பல்கலைக்கழகத்தில் 65 வீதமான பெண்கள் கல்விகற்றும், பெண்கள் மத்தியில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தமுடியவில்லை என்றார் அவர்.
நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகள், குறிப்பிட்ட அளவு முடிவுகளை வெளிப்படுத்தவில்லை. இதனை ஒரு குறையாக கருதாது ஆய்வுகள் சார்ந்த கருத்துக்களை நாம் எமது பார்வைக்கு எடுத்துக்கொண்டால் ,- முதல் ஆய்வுக்கட்டுரையாக மருத்துவபீட மாணவன் வேதநாயகம் அன்டனி சரோன் பெண்களின் மார்பக புற்றுநோய் தொடர்பில் தாதிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றைச் சமர்ப்பித்திருந்தார் .
நீரிழிவு நோயை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தல், இரண்டாம் நிலைக்கு இட்டுச் செல்லாமல் பாதுகாத்தல் தொடர்பான ஆய்வறிக்கையை வினித்ரா ஜெயபிரகாஷ் வழங்கியிருந்தார்.
பெண் தாதியர் பணியில் வேலைத் தரத்தை பாதிக்கும் காரணிகள் என்பது தொடர்பாக ஸ்ரீபாலி நந்தகுமார ஆய்வறிக்கையொன்றை வாசித்தார்.
தரம் 8 மற்றும் 9இல் கல்வி பயிலும் பெண்களுக்கு இடையில் நோய்த்தாக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணிகள் தொடர்பில் யாழ் கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஜே.எ.ரி .ரி .என் .ஜெயதிஸ்ஸ என்பவரால் வாசிக்கப்பட்டது.
வாழ்க்கைத் தரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணிகள், முதிய பெண்களின் வாழ்வியலில் செலுத்தும் தாக்கம் தொடர்பாக நல்லூரில் உள்ள முதிர் வயதுடையோரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை கே.தனுஜன் என்பவரால் சமர்ப்பிக்கப்பட்டது.
அதேபோல மலையக பெருந்தோட்ட ப் பெண்களின் சுகாதாரமும் அதன் சவால்களும் என்ற ஆய்வும் புளோரிடா சிமியோன் என்பவரால் சமர்ப்பிக்கப்பட்டது.
மலைநாட்டு பெண்களது வாழ்வியல் சிரமநிலை வெளிக்கொணரப்பட வாய்ப்பு
அதேபோல மாநாட்டின் தலைப்புக்கு ஏற்ப வாழ்க்கையை தொலைத்த ஊர் தலைமுறையினர், போரின் பின்னரான பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வியல்,- என்ற தலைப்பில் சரோஜா சிவச்சந்திரனும் ,வடக்கில் மாற்றுப்பாலினத்தாரின் உரிமைகள் தொடர்பாக எஸ்.ஏ.சந்தோஷ் என்பவரும்,பெண்களுக்கெதிரான பால்நிலை வன்முறை; ஓர் பார்வை என்ற தலைப்பில்
புளோரிடா சிமியோன் என்பவரும், ‘பிந்தைய போர்ச் சூழலில் இயலாமை கொண்ட பெண்கள் அதிகாரம்’ என்ற ஆய்வறிக்கையாக இந்திய ஆய்வாளர் ஆர் .எம் .தமிழ்ச்செல்வன் என்பவரும்,
‘ஈழப்போரில் பாதிக்கப்பட்ட பெண்களும் கருணைப்பால உதவித்திட்டமும்’ என்ற தலைப்பில் வலன்ரீனா இளங்கோவன் என்பவரும், முன்னாள் பெண்போராளிகளின் சமூக பொருத்தப்பாடு தொடர்பில் ஜே.கீர்த்தனாவும் , ‘சமூகமயமாக்கல் –பெண் போராளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்’கள் என்ற தலைப்பில் சிந்துஜா லிங்கசாமியும் , ‘பெருந்தோட்டத் துறையில் பெண்கள்’ என்ற ஆய்வறிக்கையை சரஸ்வதி சிவகுருவும், ‘பெண் தலைமைத்துவம் பிரச்ச னைகளும் சவால்களும்’ போன்ற பெண்கள் தொடர்பான கருத்தியல்களைக்கொண்ட தலையங்கங்களில் துறை சார்ந்தவர்களும் ,அதுதொடர்பான துறையில் பல்கலையில் கல்வி பயிலும் மாணவர்களும் ,பல்கலை விரிவுரையாளர்களாலும் ஆய்வுகள் செய்யப்பட்ட மதிப்பீட்டு முடிவுகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன .
இந்திய அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து ஆய்வுரையை சமர்ப்பித்தவர்களில் ‘மலம் அகற்றிச் சுத்தம்செய்யும் தொழில் புரியும் தலித் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சவால்களும்’ தொடர்பான ஆய்வறிக்கையை சுசீந்திரா பழனிச்சாமி சமர்ப்பித்திருந்தார்.
இந்த ஆய்வுகளின் மூலம் ஓரளவுக்கு உலக நாடுகளிலும், அண்டை நாடுகளில் இருக்கும் பெண்களும், நம் நாட்டு பெண்களும் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல் கள் தொடர்பில் வெளிக்கொணர பெண்ணியமும் பெண் அமைப்புக்களும் இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது என்பதை இந்த மாநாடு தெளிவுபடுத்தியுள்ளது .
இலங்கையின் தலைமை அமைச்சரது மனைவி முதல் நாளின் இரண்டாவது அமர்வில் ஆற்றிய உரை, இலங்கை அரசு, பெண்கள் தொடர்பான கரிசனை என்ற பதத்துக்குள் சற்றும் உள் நுழைய வில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.பெண்களின் அரசியல் வலுவூட்டிடல் என்பது இலங்கையைப்பொறுத்தவரை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என்பதை திருமதி ரணில் விக்கிரம சிங்க தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் பெண்களின் வலுவாக்கம், எல்லாப்பகுதிக்கும் ஊடுருவாக்க நிலைக்கு இட்டுச்செல்லப்பட வேண்டும் எனவும் அவர் விளக்கமளித்தார். வடமாகாணத்தில் போரின் பின் பெண்கள் மீதான அடக்கு முறைகள் அதிகரித்திருப்பதை திருமதி விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார். இது எமது நாட்டின் அரசுக்குச் சென்று சேரவேண்டிய மிக முக்கியமான செய்தியாக இருக்கின்றது.
வடக்கைப் பொறுத்தவரை, பெண்களின் கணவர்மார் காணாமல் போனமை தொடர்பில் அரசு அதி சிரத்தை கொள்ளாமல் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியதாக நாம் எடுத்தும் கொள்ளலாம் .
அதேபோல வடக்கு–கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளின் பெண்களுக்கு அரச ,அரச சார்பற்ற நிறுவங்கள் கூட பெண்களுக்கான போதிய உதவிகளையோ வலுவூட்டல்களையோ அரசு வழங்கவில்லை என்ற உண்மையையே அவர் சுட்டிக்காட்டி இருந்தார் .
அவரது முக்கிய கருத்தாக, பெண்கள் கூட்டாக இணைந்து பணியாற்றி இவற்றைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதாக அமைகிறது. ஒட்டுமொத்தமாக பெண்கள் என்போர், நாட்டுக்கான பங்களிப்பின் மிக முக்கிய காரணிகளில் மிக முக்கியமான அங்கம் என்பதை இந்த மாநாடு எடுத்துக் கூறியது .
ஆயினும் கூறப்பட்ட கருத்துக்கள், கருத்தளவில் மாத்திரம் என்றில்லாமல், அந்த நிகழ்வுக்கு வருகைதந்த அனைவரும் அவற்றை சமூக கீழ்மட்டப் பெண்கள் வரை முக்கிய விடயமாக கருதிக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே தேவையாகவும் அவசிய கடமையாகவும் இருந்தது.
அதனைவிட உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இருந்தும் வருகை தந்த அறிஞர்கள் ஈழப்பெண்களின் நடைமுறை வாழ்வியல் சிக்கல்களை நன்கு புரிந்துகொண்டு அவற்றை தம் அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு மாற்றியமைத்து பெண்களுக்கான வலுவூட்டலுக்கு ஆவன செய்வார்கள் என நம்புவோம் .
குறிப்பாக இலங்கையில் மலையக பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் முதன் முதலாக வெளி நாட்டு சமூகத்தின் மத்தியில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. மலையகப் பெண்களின் தொழில்முறை மற்றும் ஊதியம், தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வுக்கு இந்த பெண்கள் மாநாடு வழிவகுக்கும் என நம்புவோம் .
Pingback: http://www.blackhatlinks.com/generic_keyword_anchor_list.php
Pingback: result HK
Pingback: https://hmkasinotsuomi.com/
Pingback: เครื่องพ่นละอองฝอย
Pingback: sex loli
Pingback: ฟิล์มกรองแสง
Pingback: bit.ly/kto-takoy-opsuimolog
Pingback: ปั้มฟอล
Pingback: รับจํานํารถ
Pingback: สั่งเค้กวันเกิด
Pingback: shorts
Pingback: pgroyalbet
Pingback: Lucky Casino
Pingback: senegal gambia
Pingback: ล่องเรือเจ้าพระยา
Pingback: yaltalife.ru
Pingback: kinogo
Pingback: ค่ายเกมส์ Kiss me bet
Pingback: rasschitat dizayn cheloveka onlayn
Pingback: raschet karty dizayn cheloveka
Pingback: humandesignplanet.ru
Pingback: human design
Pingback: Opsumiologist
Pingback: Psychologist #1 in the World
Pingback: Best Psychologist in the World
Pingback: site
Pingback: dultogel 4d login
Pingback: https://hitclub.blue
Pingback: printsipy forda
Pingback: dizain-cheloveka
Pingback: พอต ราคาส่ง
Pingback: Slot Joker เกมใหม่ โบนัสแตกโหด
Pingback: ที่พักนักเรียนในอังกฤษ
Pingback: 10000
Pingback: 9gm.ru
Pingback: hdorg2.ru
Pingback: raso.su
Pingback: lazywin888
Pingback: sci/sci news/news sci/ science diyala
Pingback: Jaxx Liberty
Pingback: slot online เว็บนอก
Pingback: โคมไฟ
Pingback: lucabet
Pingback: ตู้แช่สแตนเลส