முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி- தி.மு.க.வினர் 1000 பேர் கைது

374 0

201609161054014930_cauvery-issue-tamilnadu-bandh-dmk-party-members-1000-person_secvpfகர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் இன்று தி.மு.க.வினர் சார்பில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும் இன்று முழுகடையடைப்பு மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் வந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்திற்காக தி.மு.க மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கூடியிருந்தனர்.

ரெயில் திண்டுக்கல் நிலையத்தை அடைந்ததும் அதனை மறித்து அவர்கள் கோ‌ஷமிட்டனர். கர்நாடகா அரசை கண்டித்தும், காவிரி பிரச்சனையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

இதனையடுத்து பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒட்டன்சத்திரம் சக்கரபாணி, பழனி செந்தில்குமார், நத்தம் ஆண்டிஅம்பலம் உள்பட தி.மு.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.