மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதி முடிவு செய்வதற்காக இன்று (22) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடியதாக டொக்டர். பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 10 கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடங்கிய ஆலோசனை திட்ம் ஒன்றை முன்வைத்தும் அதற்கான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவினால் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.