இந்த நல்லாட்சி அரசாங்கம் முழு நாட்டையும் தேசிய மட்டத்தில் புரட்டி விட்டு, கிராமத்தையும் புரட்டுவதற்கு தயாராகியுள்ளதாகவும் இதற்காகவே கம்பெரலிய செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற “எளிய” நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
இந்த கம்பெரலிய நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் மண்வெட்டியை எடுத்து மண்ணை வெட்டிய முறையை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். கிராமத்தில் எஞ்சியுள்ள எமது சம்பிரதாயத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில்தான் அது காணப்பட்டது.
கிராமத்தில் எஞ்சியுள்ள எம்முடைய கலாசாரத்தையும் இறுதியாக முடித்து வைக்கும் செயற்பாடாகவே இந்த கம்பெரலிய நடவடிக்கை அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.