அரசாங்கத்தின் இயலாமையே தூக்குத் தண்டனை தீர்மானம்- சிறிவிமல தேரர்

327 0

கைதிகளுக்குத் தூக்குத் தண்டனையை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானமானது, அரசாங்கத்தின் இயலாமையையே எடுத்துக் காட்டுவதாக கெட்டம்பே ராஜோபவநாராம விகாராதிபதி கெப்படியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸ் இன்று தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறச் சென்ற போதே இதனைக் கூறியுள்ளார்.

நாட்டிற்குள் அரசாங்கத்தைச் செய்ய முடியாமல் போயுள்ளதே இந்த தீர்மானத்துக்கு அரசாங்கம் வருவதற்குக் காரணம். போதைப் பொருள் நாட்டுக்குள் பயன்படுத்தப்படுகின்றதாயின், அதனை நாட்டுக்குள் கொண்டுவரும் வழிமுறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தூக்குத் தண்டனை அதற்குப் பரிகாரம் அல்ல.

போதைப் பொருள் பயன்பாட்டை சட்டத்தால் தடுக்கும் அளவுக்கு திராணியுள்ள தலைவர்கள் தற்பொழுது நாட்டில் இல்லை. நாடு வர வர அதலபாதாளத்துக்குள் சென்று கொண்டிருப்பதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment