புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் உட்பட உதவியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழினுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புகையிரத திணைக்கள ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி நியமித்த அமைச்சர் சரத் அனுமுகம தலைமையிலான குழுவினர் சிபாரிசு செய்த விடயங்கள் ஒரு தரப்பினரக்கு மாத்திரமே சாதகமாக காணப்படுவதனாலேயே மேற்கண்ட போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
அத்துடன் இப் போராட்டம் காரணமாக புகையிரத சேவைகள் தாமதிக்கப்படலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.