தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள்

474 0

img_0124செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள்.

பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்து போகாது. தங்கள் கண்களுக்கு முன்னே தங்களுக்காக ஒருவன் தன்னுயிரை அணு அணுவாக மாய்த்ததை எவராலும் மறக்க முடியுமா? இல்லையே!

தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாளான நேற்றைய தினம் செப்ரெம்பர் 15ம் திகதி நேரம் 10:48 மணிக்கு Essen நகரில் உள்ள மாவீரர் தூபிக்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இன்று செப்ரெம்பர் 16ம் திகதி (இரண்டாம் நாள் ) மாலை 4 மணியில் இருந்து 9 மணிவரை Stuttgart நகரில் அடையாள உணவுதவிர்ப்பு ஒழுங்குசெய்யப்படுள்ளது.ஏனைய நாட்களிலும் நகரங்கள் தோறும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

img_0118 img_0116 img_0115 img_0114