வவுனியாவில் பொதுமக்கள் போராட்டம் (காணொளி)

525 0

vavuniya-protested

வவுனியா அச்சிபுரம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பேரூந்தை மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா அச்சிபுரம் கிராமத்திற்கூடாக பேரூந்துகள் செல்வதற்கு வழித்தடம் இருந்தும் பேரூந்துகள் தமது கிராமத்தினூடாக செல்லாததால் அச்சிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக பேரூந்துகள் கோவில்குளம், சிதம்பரபுரம் பிரதான வீதியினூடாக செல்வதால் ஆச்சிபுரம் கிராமத்தில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதுடன் பாடசாலை மாணவர்களும் பல கிலோமீற்றர் தூரம் நடந்தே பாடசாலைக்கு செல்லவேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் பேருந்தொன்று பல கீலோமீற்றருக்கு அப்பால் பாடசாலை மாணவர்களை இறக்கி விட்டு சென்றதுடன் இன்று காலை கிராமத்தினூடாக தனது பயணத்தை மேற்கொண்ட சமயமே அப்பகுதி மக்களால் பேரூந்து வழி மறிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் பொதுமக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில், பேருந்தை பாடசாலை நேரங்களில் சேவையில் ஈடுபடுத்த முடியும் என்பதுடன், பாதை சீரின்மை மற்றும் முச்சக்கரவண்டிகள், பேரூந்தின் கட்டணத்திற்கே பலரை ஏற்றி சேவையில் ஈடுபடுவதால் தமக்கு வருமானம் போதாதுள்ளதாகவும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை பொதுமக்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.