அரசாங்கத்தினால் திட்டமிட்டுள்ள புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், ஆணிவேரில்லாத நிலையில் இந்த நாடு 9 துண்டுகளாக உடைந்து விடும் என தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.
எதிர்கால சந்ததியினரை கௌரவமாக ஒரே நாட்டில் வாழ வைப்பது தான் எமது எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை புதிய அரசியல் அமைப்பினூடாக இவ்வரசாங்கம் உடைக்கப் பார்க்கின்றது. இதற்காக தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சகல சமூகத்தவர்களும் ஒன்றிணைந்து நாட்டில் தலைமை மாற்றமொன்றை முன்னெடுப்போம் எனவும் தேரர் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தேரர் இதனைக் கூறினார்.