பண்டாரநாயக்க குடும்பத்திரை பிரித்தது போல், ராஜபக்ஷ குடும்பத்தினரை பிரிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான மக்கள் பேரணி ஒன்று நேற்று (15) பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினரின் பலம், இந்த நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களை விட வலுவானது என்றும் அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதற்கிடையில், மற்றுமொரு பேரணி ஒன்று இரத்தினபுரி, பெல்மடுல்ல பகுதியில் நேற்று (15) நடைபெற்றது.
இந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை, பொருத்தமான நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.