​​ஐ.தே.கவில் 1 இலட்சம் புதியவர்களுக்கு அங்கத்துவம் – அகிலாவிராஜ்

683 47

ஐக்கிய தேசியக் கட்சியில் புதியவர்கள் 1 இலட்சம் பேருக்கு கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இச் செயற்பாடுகள் கட்சியின் செயலாளர் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளன.

​புதியவர்கள் 1 இலட்சம் பேருக்கு அங்கத்துவம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க வின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக புதிய முகங்களை இணைத்துக்கொள்ளும் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கின்றது.

அதன் பிரகாரம், புதிய முகங்களை இணைத்துக்​கொள்வதற்கான உதவிகள் ஐ.தே.க வின் மகளிர் அணி, இளைஞர்கள் அணி மற்றும் கிளைக்காரியாலயங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment