வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

6576 14

கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் இருந்து வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிரிபத்கொட, நாஹேன கெமுனு மாவத்தைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹுனுபிட்டிய, நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வத்தள, ஹெந்தல சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும் அவருடைய வீட்டிற்கு வந்த இருவரினால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸா்ர தெரிவிக்கின்றனர்.

கத்தியால் குத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நபரின் முச்சக்கர வண்டியிலேயே சடலத்தை எடுத்து சென்று குறுக்கு வீதி ஒன்றில் வைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment