ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டாய ராணுவ சேவை 16 மாதங்களாக நீட்டிப்பு

2234 46

ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 மாதங்களாக இருந்த கட்டாய ராணுவ சேவையின் காலத்தை 16 மாதங்களாக நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏமனுடனான போரின் போது ராணுவத்தில் பணியாற்றுவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், பள்ளி உயர் கல்வி முடித்த ஆண்கள் அனைவரும் கட்டாயமாக 12 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டம் இயற்றப்பட்டது. உயர்கல்வி முடிக்காத ஆண்கள் 2 ஆண்டுகள் ராணுவ பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேபோல், பெண்கள் விருப்பப்பட்டால், அவர்களது குடும்பத்தினர் அனுமதித்தால் ராணுவத்தில் பணியாற்றலாம் எனவும் சட்டம் அனுமதித்திருந்தது.

இந்நிலையில், கட்டாய ராணுவ பணியாற்றுவதற்கான 12 மாத காலத்தை 16 மாதங்களாக அதிகரித்து ராணுவ தலைமை அதிகாரி அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Leave a comment