இங்கிலாந்தில் மர்ம வைரஸ் தாக்கி இந்திய மாணவி பலி

544 0

201609151034154212_indian-origin-student-dies-of-rare-meningitis-virus-in-uk_secvpfஇங்கிலாந்தில் மர்ம வைரஸ் தாக்கி 48 மணி நேரத்தில் இந்திய மாணவி பலியானார்.  இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் உள்ள பல் கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பாவன் புர்பா (வயது 20). என்ற மாணவி மருந்தியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவரை மர்ம வைரஸ் நோய் தாக்கியது. இந்த நோய் ஏற்பட்ட 48 மணி நேரத்தில் அவர் உயிர் இழந்தார். இது ஒரு வகை மூளை காய்ச்சல் நோய் போல் தென்பட்டது.

ஆனால், இது எந்த விதமான வைரசால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதுபோன்ற வைரஸ் ஒரு ஆண்டில் மட்டும் 160 பேரை தாக்கி உள்ளது. பல உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

இது தொடர்பாக மாணவியின் தந்தை பல்தேவ் குர்பா கூறும்போது, புதிய வகை வைரஸ் நோய் தாக்கி வருவது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் தான் எனது மகளை இழந்து விட்டேன். இந்த நோய் தாக்குவது எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. எனவே, இனியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.