மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ராம்பாவ் மல்ஜியின் 75-வது பிறந்த நாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்யா சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என பாராட்டி பேசினார்.
மேலும், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கடைசி குடிமகனையும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் கொள்கையும் அதுபோலவே உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. மூத்த தலைவர் கே.எல்.அத்வானி, 1996-ல் நம்முடைய அரசியலமைப்பும் தேசிய மதச்சார்பின்மை என்ற தலைப்பு குறித்து பேசினார். மேலும், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராம்மாதவ், இந்த்ரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.