மலையக மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ஆர்.ராஜாராமை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளதாக மலையக மக்கள் முண்ணனியின் பொதுச்செயலாளர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட தலைவர்கள் இருவருக்கு எதிராக தகாத வார்த்தை பிரயோகங்களை ஆர். ராஜாராம் மேற்கொண்டமையினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் முடிவுறும் வரை ராஜாராமினால் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வகிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.