அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து பிரதமர் அழைத்துவர வேண்டும்- ரோஹித

280 0

ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தின் போது தனது நண்பர் அர்ஜூன் மஹேந்திரனை கையோடு அழைத்து வரவேண்டும் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஆவார். இவர் சிறந்த ஒரு பொருளியல் வித்துவான். இவர் மத்திய வங்கியில் வந்தால் நாட்டின் பொருளாதாரம் பிரகாசம் அடையும் என்றெல்லாம், பிரதமர் அவரை அறிமுகம் செய்தார்.

இவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கும் போது தனது உற்ற நண்பர் என பிரதமர் அவரை அறிமுகம் செய்தார் எனவும் ரோஹித எம்.பி. மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் இன்று விஜயம் செய்துள்ளார். பிரதமரின் விஜயம் குறித்து ஊடகங்களிடம் இன்று (08) கருத்துத் தெரிவிக்கையிலேயே ரோஹித அபேகுணவர்தன இதனைக் கூறினார்.

Leave a comment