காசல் ரீ நீர்தேக்கத்தின் நோர்வுட் சிறிய தரவலவத்த பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நோர்வுட் பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை அநுராதபுரம் திசாவாவியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
50 வயதுடைய ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.