இவ்வருடத்தின் கடந்த 6 மாத காலப் பகுதிக்குள் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1164647 பேராக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் 1010444 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிடும் போது 15.3 வீத அதிகரிப்பு காணப்படுவதாகவும் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது