சம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவி தடை என்றால் அதையும் துறக்கத் தயார் – திகாம்பரம்

541 0

தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இம்முறை ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தரப்பினர் தெளிவாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களை இணைத்து வீதியில் இறங்கி போராடுவேன் என தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் தோட்டப்பகுதிகளில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக போராடுவதற்கு தயாராகும் படி மக்களை வழியுறுத்திக் கொண்டார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக “பசும் பொன்” என்ற வீடமைப்பு திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 90 வீடுகள் இன்று (08) பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

எதிர்வரும் காலத்தில் சம்பள பிரச்சினை தொடர்பான கூட்டு ஒப்பந்தம் செய்யப்படவிருக்கின்றது. கடந்த காலத்தில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன் கூட்டாக இணைந்து பேசி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் கம்பள பிரச்சினை காலத்தில் மக்களுடன் சேர்ந்து நானும் வீதியில் இறங்கி போராடுவதால் தான் ஓரளவு ஏனும் சம்பளம் கிடைக்கின்றது.

இப்பொழுதும் கூட திகாம்பரம் அமைச்சராக இருப்பதால் தான் சம்பள உயர்வு விடயத்தை பேச முடியாது உள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். சம்பள உயர்வுக்கு எனது அமைச்சு தான் தடை என்றால் அமைச்சு பதவியிலிருந்து விலகவும் நான் தயார். அமைச்சு பதவி எனக்கு ஒரு பெரிய விடயம் அல்ல.

அதேவேளையில் பதுளை மாவட்ட எம்.பி வடிவேல் சுரேஸ் 750 ரூபாய் அடிப்படை சம்பளம் இல்லையென்றால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டேன் என தெரித்திருக்கின்றார். அப்படியென்றால் அதை அவர் பெற்றுக்கொடுத்தால் எமக்கு பெரிய சந்தோஷமாகும். அவரை பாராட்டுவோம்.

ஆனால் ஆயிரம் ரூபாய் கடந்த காலத்தில் முன்வைத்தவர்கள் இன்று 750 ஆக அறிவிக்கின்றனர். இவர்களின் அறிக்கையை பார்த்தார் இவ்வாறாக தெரிகின்றது.

கடந்த காங்களில் சம்பள பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களுக்கு நிலுவை பணம் கிடைக்கவில்லை. இதற்கும் என்னை சுட்டிக்காட்டி குறை கூறினார்கள். ஆனால் நான் திறைசேரியிலிருந்து இரண்டு மாதத்திற்கு ஆறாயிரம் ரூபாவை மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததால் தான் நிலுவை பணமும் பெறமுடியவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறாக காலம் காலமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருபவர்களை நம்பும் நீங்கள் உண்மை சொல்லும் எங்களை ஏன் நம்புவதில்லை எனவும் தெரிவித்தார்.

எனக்கும் அந்த தலைவருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. முகம் கூட பார்த்து கதைத்ததில்லை. ஆனால் மக்களுக்கு நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பதாலேயே அவருக்கும் எனக்கும் பிரச்சினை ஏற்படுகின்றது என தெரிவித்த இவர் எதிர்வரும் தேர்தலில் கடந்த காலத்தில் செய்த பிழைகளை செய்து விடாதீர்கள். அப்போது காலம் காலமாக அடிமைகளாகவே இருக்க வேண்டி வரும்.

எதிர்வரும் சம்பள பிரச்சினையில் மக்களோடு தான் நான் இருப்பேன். கம்பனிகாரர்களுக்கு எதிராக போராடுவேன். அப்போது தான் கம்பனிகாரர்களும் பயப்படுவார்கள். இல்லையேல் கம்பனிகாரர்கள் ஒப்பந்தம் செய்பவர்களையும் மக்களையும் ஏமாற்றி விடுவார்கள்.

எனவே வீட்டில் இருங்கள் சம்பளம் கிடைக்கும் என்று சொல்பவர்கள், சாரியான முறையில் சம்பளத்தை பெற்றுக்கொடுத்தால் நாம் ஏன் வீதிக்கு இறங்கி போராட வேண்டும். தேவை இல்லை. ஆனால் முறையாக சம்பளம் பெற்று தராத பட்சத்தில் போராடியாவது 20 வீதம் தொகை சம்பளத்தை பெற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் அடிப்படை சம்பளம் கூட்டப்படுகின்றதா என கேள்வி எழுப்பிய இவர் இன்று மலையகத்தில் இரண்டாவது தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் இருக்கின்றது. எம்மை தட்டிவிட்டு சென்று மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.

Leave a comment