தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்திலான அரசாங்கம் அமைய உள்ளது என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டுக்காக பல சிறந்த சேவைகளைச் செய்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அவற்றை பாதுகாப்பதற்கு பதிலாக விற்பனைச் செய்து வருகின்றனது.இந்த நிலையில் நாட்டை பாதுகாக்க மீண்டும் மகிந்தவின் நிர்வாகம் உருவாக வேண்டும் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.