ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்த விபத்தில் 09 வயதுடைய ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த சாபித் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். அத்துடன் இச் சம்பவத்தின் போது ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களுள் ரமீஸ் என்பவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.