நொச்சியாகம கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

274 0

நொச்சியாகம, வன்னியகுளம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், வன்னியகுளம் பகுதியை சேர்ந்த சுஜீவ பிரசன்ன குமார என்பவர் நேற்று முன்தினம் (06) பகல் இனம்தெரியாத குழு ஒன்றினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யயப்பட்டார்.

இந்நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் கொலை முரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த தினத்தில் திருமண நிகழ்வொன்றின் போது அப்பகுதியில் உள்ள பிரபல நபர் ஒருவர் மற்றும் அவரின் அடியாட்கள் மூலம் தமது மகளை நிர்வாணமாக்கியதாகவும் இதனால் கோபமடைந்த சுஜீவ அவர்களை தாக்கியுள்ளதாகவும் இதனை காரணமாக வைத்து பலி தீர்ப்பதற்காகவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த சுஜீவவின் மனைவி தெரிவிக்கின்றார்.

சுஜீவவின் சடலம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளதுடன் குடும்பத்தினருக்கும் கொலை முரட்டல் விடுக்கப்படுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலை காரணமாக சுஜீவவின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை இனங்கண்டுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment