ஹெரோயின் மீட்பு

257 0

களுபோவில மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களிலிருந்து 1248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹேரோயின் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

103.4 கிலோ கிராம் ஹேரோயினே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 29 மற்றும் 40 வயதை உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

Leave a comment