கூட்டுறவுத் துறையை மேம்படுத்த விரைவில் துரித நடவடிக்கை- மைத்திரிபால

250 0

கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான காத்திரமான தீர்மானங்களை அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேசிய கூட்டுறவு சபை,  சம்பந்தப்பட்ட அமைச்சுடன் இணைந்து வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.

கூட்டுறவுத் துறையின் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்களை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரைவில் முன்னெடுக்கவுள்ளேன். பின்னர் நிதி அமைச்சுடன் அவர்களை தொடர்புபடுத்தி தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளேன் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று (07) இடம்பெற்ற 96 ஆவது சர்வதேச கூட்டுறவுதின விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விழாவில், அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன், பிரதி அமைச்சர்களான புத்திக்க பத்திரன, அமீர் அலி, அலிசாஹிர் மௌலான, இராஜாங்க அமைச்சர்களான ஹிஸ்புல்லா, சிறியானி விஜேவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், நசீர், இஸ்மாயில், சி.யோகேஸ்வரன் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்நசீர், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க பீரிஸ், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க,முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சுபைர், உதுமான் லெப்பை, தேசிய அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனப் பணிப்பாளர் அம்ஜாத், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment