புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் பலி

285 0

ரத்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத கடவை மூடப்பட்டிருந்து சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் காலியில் இருந்து மருதனை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றும் ஒருவர் பலத்த காயங்களுடன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புஸ்ஸ, பரணவத்த பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment